காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. நவக்கிரகத் தலங்களுள் சனீஸ்வரனுக்கு உரிய தலம். இங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூசித்ததால் நளமன்னனை பற்றிய சனி விலகிய தலம். சனிப்பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. |